உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சிறுவாலையில் உச்சிகால பூஜை

 சிறுவாலையில் உச்சிகால பூஜை

கண்டாச்சிபுரம்: சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை நடந்தது. கெடார் அடுத்த சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் நேற்று மதியம் 12 மணி அளவில் உச்சிகால பூஜை நடந்தது. மன்னதாக பாலாம்பிகை அம்மனுக்கும், பாலேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து வாழைப்பூ கலச பூஜையும்,சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. பின் கடன் நிவர்த்தி பூஜையும் நேர்த்திக்கடன் பூஜைகளும் நடைபெற்றன.பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.இதில் விழுப்புரம்,கண்டாச்சிபுரம்,சூரப்பட்டு,கெடார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகி சம்பத்,அர்ச்சகர் கோபி ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை