உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  காசநோயாளர்களுக்கு பெட்டகம்  

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  காசநோயாளர்களுக்கு பெட்டகம்  

விழுப்புரம்: கண்டமானடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில், காசநோயாளர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.கோலியனூர் வட்டாரம், கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் பிரியா பத்மாசினி தலைமை வகித்தார். அலுவலக கண்காணிப்பாளர் மஞ்சுளா, ஆல்தி சில்ட்ரன் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். பொது சுகாதார நிபுணர் டாக்டர் நிஷாந்த் காசநோய் ஒழிப்பு குறித்து விளக்க உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் ஊட்டச் சத்து மிக்க பெட்டகம் 40 காசநோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. காசநோய் பிரிவு ஊழியர்கள் செந்தமிழ்தாசன், அரசு மருத்துவமனை டாக்டர்கள் தீனா, தீபிகா, செவிலியர்கள் தேவ சேனா, சரஸ்வதி, முத்து லட்சுமி மற்றும் ஊழியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !