உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாழப்பட்டாம்பாளையம் கோவில் கும்பாபிஷேகம்

வாழப்பட்டாம்பாளையம் கோவில் கும்பாபிஷேகம்

வானுார்: வாழப்பட்டாம்பாளையம் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.வானுார் அடுத்த வாழப்பட்டாம்பாளையம் பேட்டை வாழி மாரியம்மன் மற்றும் கோகிலாம்பிகை சமேத திருக்கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தன. இதனை தொடர்ந்து நேற்று காலை 7 மணிக்கு நான்காவது கால யாக பூஜை, ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம், மகாபூர்ணாஹுதியும், கலச புறப்பாடும் நடந்தது. காலை 9 மணிக்கு பேட்டை வாழி மாரியம்மனுக்கும், தொடர்ந்து கோகிலாம்பிகை சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை