உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வி.சி., செயற்குழு கூட்டம்

வி.சி., செயற்குழு கூட்டம்

வானூர் : விழுப்புரம் தென்கிழக்கு மாவட்ட வி.சி., கட்சியின் செயற்குழு கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு தனியார் மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் பொன்னிவளவன் தலைமை தாங்கினார். விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், வரும் ஆக., 17ம் தேதி தமிழர் எழுச்சி நாளை கொண்டாடுவது, செப்டம்பர் 17ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறும் மது ஒழிப்பு மாநாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.இதில், வானூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பால்வண்ணன், மேலிட பொறுப்பாளர் குணவழகன், மண்டல துணைச் செயலாளர் எழில்மாறன், தொகுதி துணை செயலாளர் அன்பரசு, ஒன்றிய செயலாளர்கள் தமிழ் முகிலன், தமிழ்குடி, முருகவேல், மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ