உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி உறுதி: பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி நம்பிக்கை

50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி உறுதி: பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி நம்பிக்கை

விக்கிரவாண்டி : 'அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்ற மிதப்பில் தி.மு.க., வினர் உள்ளனர்' என பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி பேசினார்.விக்கிரவாண்டியில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, மாநில கவுரவத் தலைவர் மணி தலைமை தாங்கினார். பா.ஜ., மாநில துணைத்தலைவர் சம்பத், மாவட்ட தலைவர் கலிவரதன், த.மா.கா., தசரதன், அ.ம.மு.க., கணபதி, முன்னாள் எம்.பி., ஏழுமலை முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்.ஏ., வரவேற்றார்.கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்தி, மாநில தலைவர் அன்புமணி பேசியதாவது:தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் எல்லாம் அடிமைகளாக உள்ளனர். நம் கூட்டணியில் உள்ளவர்கள் சகோதரத்துவத்துடன் உள்ளனர். இடைத்தேர்தல் பணிக்காக தொகுதியில் எத்தனை அமைச்சர்கள் வந்தாலும் நாம் பார்க்கலாம்.இந்த தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். தி.மு.க., வினர் நம்மை எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யட்டும். நாம் தேர்தல் களப் பணி செய்வோம் . ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் சென்று ஓட்டுகள் சேகரிப்போம்.வி.சி., தலைவர் திருமாவளவனை தி.மு.க., பயன்படுத்திக் கொள்கிறது. முதல்வர் ஸ்டாலினுக்கும் சமூக நீதிக்கும் எவ்விதமான சம்மந்தமும் இல்லை. தற்போது தி.மு.க.,வினர் எல்லா தொகுதியிலும் வெற்றி பெற்று விட்டோம் என்ற மிதப்பில் உள்ளனர்.அவர்களிடம் பணம் மட்டுமே உள்ளது. நாம் எப்படி செயல்படவேண்டும் என திட்டமிடுவோம். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 38 பேர் இறந்துள்ளனர். தெருவுக்கு தெரு இப்போது கஞ்சா விற்பனையாகிறது. இவற்றையெல்லாம் நாம் மக்களிடம் எடுத்துச் சொல்லி ஓட்டு சேகரிப்போம். வெற்றிக்கு ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசம் எல்லாம் வேண்டாம். 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அன்புமணி பேசினார்.பா.ம.க., வழக்கறிஞர் பாலு, மாவட்ட தலைவர்கள் தங்கஜோதி, புகழேந்தி, அமைப்பு செயலாளர்கள் பழனிவேல், மணிமாறன், மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ