உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆயுதப்படை போலீஸ் குவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஆயுதப்படை போலீஸ் குவிப்பு

விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமைச்சர்கள், கட்சியினர் என திரண்டுள்ளதால், ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. தேர்தலில் தி.மு.க., - பா.ம.க., இடையே நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் தி.மு.க., தரப்பில் தற்போது 15 அமைச்சர்கள், 30க்கும் மேற்பட்ட எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், கட்சியினர் பலர் விக்கிரவாண்டியில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போல், பா.ம.க., தரப்பில் அன்புமணி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகளும் திரளாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே, பிரசாரம் மேற்கொள்வதில் கிராமப்புறங்களில் கடந்த சில தினங்களாக மோதலும் ஏற்பட்டு வருகிறது. இதனால், பாதுகாப்புக்காக போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர்.முன்னெச்சரிக்கையாக முதல்கட்டமாக 200 ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உளுந்துார்பேட்டை பட்டாலியன் மற்றும் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சி பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்த 3 பட்டாலியன் போலீசார் என மொத்தம் 200 போலீசார் நேற்று மாலை விழுப்புரம் வந்தனர். இவர்கள், விக்கிரவாண்டி தொகுதிக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை