உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

விழுப்புரம்,; விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., செயல்வீரரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது.மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். பொருளாளர் ஜனகராஜ் வரவேற்றார். ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், மகளிரணி பிரசாரக்குழு தேன்மொழி முன்னிலை வகித்தனர். அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார்.நகர செயலாளர் சக்கரை, நகரமன்ற சேர்மன் தமிழ்செல்வி, ஒன்றிய சேர்மன்கள் சச்சிதானந்தம், கலைசெல்வி, வளவனுார் பேரூராட்சி சேர்மன் மீனாட்சி ஜீவா, நகர செயலாளர் ஜீவா, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முரளி, மும்மூர்த்தி, பிரபாகரன், கல்பட்டு ராஜா, மைதிலி ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் வாசன், பஞ்சநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில், விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக லட்சுமணனை நியமனம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர் பொன்முடிக்கு நன்றி தெரிவிப்பது. மும்மொழி கொள்கையை திணிக்கும் மத்திய அரசை கண்டிப்பது, வரும் மார்ச் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை, மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.மாவட்ட துணை செயலாளர் இளந்திரையன் நன்றி கூறினார்.

கிடா விருந்து

மத்திய மாவட்ட பொறுப்பாளராக லட்சுமணன் பொறுப்பேற்று நடக்கும் முதல் கூட்டம் என்பதால், ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். நிர்வாகிகளுக்கு செண்டமேளம் வரவேற்பு மட்டுமின்றி, மதியம் கிடா விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார். விருந்தை முடித்து சென்ற நிர்வாகிகளுக்கு, மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் கைக்குப்பி நன்றி தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை