| ADDED : மே 30, 2024 05:11 AM
விழுப்புரம்: விழுப்புரம் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்தாண்டு மாணவியர் சேர்க்கை நேற்று தொடங்கி நடந்தது.விழுப்புரம் எம்ஜிஆர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்த கல்வியாண்டிற்கான (2024-25) மாணவியர் சேர்க்கை நேற்று தொடங்கியது. இந்த கல்லூரியில் 11 இளங்கலை படிப்புகளுக்கான, மொத்தமுள்ள 840 சேர்க்கை இடங்களுக்கு, 18,640 மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.இதற்காக முதற்கட்டமாக, சிறப்பு ஒதுக்கீட்டினருக்கான கலந்தாய்வாக, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய முன்னுரிமை பிரிவு மாணவிருக்கு நேற்று காலை 10 மணிக்கு கவுன்சிலிங் துவங்கியது.கல்லுாரி முதல்வர் தாமோதரன் தலைமையில் சேர்க்கை குழுவினர், மாணவிகளின் சான்றிதழ்கள், ஆவணங்களை ஆய்வு செய்து கலந்தாய்வு மேற்கொண்டனர். சிறப்பு ஒதுக்கீட்டுக்கான 35 சேர்க்கை இடங்களுக்கு கலந்தாய்வு நடந்தது. 70 மாணவிகள் கலந்துகொண்டனர். மதிப்பெண் உள்ளிட்ட அரசு விதிகள் படி தேர்வு செய்யப்பட்டனர்.இதனையடுத்து இன்று (30ம் தேதி) விளையாட்டு பிரிவு மாணவிகளுக்கு (தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் சான்றிதழ் பெற்றோர்களுக்கு) சிறப்பு சேர்க்கை நடைபெறுகிறது.