உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு நுாதன தண்டனை விழுப்புரம் நீதிக்குழுமம் உத்தரவு

சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு நுாதன தண்டனை விழுப்புரம் நீதிக்குழுமம் உத்தரவு

விழுப்புரம், : விழுப்புரத்தில் பாலியல் வழக்கில் சிறுவன் ஒருவருக்கு, நுாதன தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.விழுப்புரம் அடுத்த கெடார் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் அஜித்,24; இவர், கடந்த 2016ம் ஆண்டு, 14 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், சிறுமியை அவரது வீட்டில் விட்டுள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் அஜித்தை கைது செய்த கெடார் போலீசார், அவர் மீது விழுப்புரம் இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் கடத்தல் மற்றும் போக்சோ பிரிவில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஜித் ஓராண்டிற்கு அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை சமூக சேவை செய்திட உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை