உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

விழுப்புரம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

விழுப்புரம்: விழுப்புரம் ேஹாஸ்ட் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.விழுப்புரம் ஏ.எஸ்.ஜி., மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். செயலாளர் பார்த்திபன் வரவேற்றார். மாவட்ட தலைவர்கள் தனபால், வெங்கடேசன், வேல்குமார், கோபி, ராஜவேல், செல்வராஜ், முரளிதரன் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் 2024-25 ஆண்டுக்கான புதிய தலைவராக முன்னாள் கவுன்சிலர் ராஜா, செயலாளராக சுரேஷ், பொருளாளராக பக்தவத்சலம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், ரத்ததான முகாம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட திட்டங்களை ஏற்பாடு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.நடராஜன், சிவராமன், சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ