உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அ.தி.மு.க., போஸ்டரால் விழுப்புரத்தில் பரபரப்பு

அ.தி.மு.க., போஸ்டரால் விழுப்புரத்தில் பரபரப்பு

விழுப்புரம்: ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் பழனிசாமி, ஓ.பி.எஸ்., - அ.ம.மு.க., என பிரிந்தன. மூன்று பிரிவுகளாக உள்ள இக்கட்சியின் தொண்டர்கள், ஒரு எம்.பி., தேர்தலையும், இடைத்தேர்தலையும் சந்தித்தனர். இதில், அ.தி.மு.க.,வினர் தோல்வியை சந்தித்த நிலையில், விரைவில் வரவுள்ள சட்டசபை தேர்தலில் மூன்று பிரிவுகளாக உள்ள இக்கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்தால் தான், வெற்றி முடியும் என முடிவு செய்து, அவரவர்களின் தலைமையிடம் ஒன்றிணைய கோரிக்கை வைத்து வருகின்றனர்.இந்த சூழலில், விழுப்புரத்தில், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெ.,வின் ஆத்மார்த்தமான கோடிக்கணக்கான தொண்டர்களின் விருப்பமானது, அவரவர் தலைமைக்கு வேண்டுகோள் வையுங்கள். பிரிந்திருக்கும் இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டும். தமிழகம், தமிழ் மக்களை காத்திட சின்னம்மா தலைமையில் ஒன்றிணைவோம்.சபதம் ஏற்போம் என குறிப்பிட்டு, கீழே பூராசாமி (எ) ராஜரத்தினம், புதிய நீதிக்கட்சி நகர செயலாளர் பாபு, அ.தி.மு.க., நகர எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சங்கர், அ.ம.மு.க., நகர ஜெ., பேரவை சிட்டிபாபு, ஓ.பி.எஸ்., அணி நகர அவைத் தலைவர் சந்திரசேகர் என பெயர்களை குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க.,வினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ