உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வானுார் அருகே வி.வி., பாட் கோளாறு 2 இடங்களில் ஓட்டுப்பதிவு தாமதம்

வானுார் அருகே வி.வி., பாட் கோளாறு 2 இடங்களில் ஓட்டுப்பதிவு தாமதம்

வானுார் : வானுார் அருகே வி.வி.,பாட் இயந்திர கோளாறு காரணமக 2இடங்களில் ஓட்டுப்பதிவில் கால தாமதம் ஏற்பட்டது.விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 278 ஓட்டச்சாவடி மையங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. காலை 7:00 மணிக்கு முன்னதாகவே மக்கள் ஓட்டு போட ஆர்வமுடன் வந்தனர்.வானுார் அடுத்த வி.பரங்கனி கிராமத்தில் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண்.155 ஓட்டுச்சாவடி மையத்தில், வி.வி.,பாட் இயந்திரம் செயல்படவில்லை. தொடர்ந்து அதிகாரிகள், அந்த இயந்திரத்தை சரி செய்த பிறகு, 7:30 மணிக்கு, ஓட்டுப்பதிவு துவங்கியது.இதே போன்று எறையூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எண்.162 ஓட்டுச்சாவடி மையத்தில், வி.வி., பாட் இயந்திரம் வேலை செய்யவில்லை. அதை சரி செய்வதற்கு முற்பட்ட போதும், பலனளிக்கவில்லை. இதையடுத்து, மாற்று வி.வி., பாட் வரவழைக்கப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு பிறகு காலை 8:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி