உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / எங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் வரும்: ராமதாஸ் நம்பிக்கை

எங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் வரும்: ராமதாஸ் நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திண்டிவனம்: 'தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக பா.ம.க.,வின் பின்னால் வரும்போது ஒளிமயான எதிர்காலம் நிச்சயம் கிடைக்கும்' என கட்சியின் 36வது ஆண்டு துவக்க விழாவில் பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் கூறினார்.பா.ம.க.,வின் 36வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சிக் கொடியேற்றி, கட்சியினருக்கு இனிப்பு வழங்கினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5d6voy8v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பா.ம.க., சமத்துவம், சமூக ஜனநாயகம், சமூக நீதி என்ற உன்னதமான கொள்கையின் அடிப்படையில் 35 ஆண்டுகாலம் முடிந்து 36 ஆண்டு துவக்க விழாவை நடத்துகிறது. தொடர்ந்து மக்களுக்காக பாடுபட்டு வரும் பா.ம.க.,வை தமிழக மக்களுக்கு ஏனோ தெரியவில்லை. பெரிய அளவிலும் ஆதரவு தரவில்லை.இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இதுபோன்று கொள்கை உடைய 35 ஆண்டுகளாக, தமிழகத்தின் மக்கள் பிரச்னைகளுக்காக, போராடிக் கொண்டிருந்தாலும், மக்கள் என் பின்னால் முழுதுமாக வரத் தயங்குகின்றனர். ஆனால் எதிர்காலத்தில் தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக பா.ம.க.,வின் பின்னால் வரும்போது, ஒளிமயான எதிர்காலம் நிச்சயம் கிடைக்கும்.மின் கட்டண உயர்வு அறிவிப்பு வரும் என நான் ஏற்கனவே பல முறை கூறியிருக்கிறேன். தற்போது அறிவித்து விட்டார்கள். தமிழக மக்களை தேர்தல் நேரத்தில் 1,000 ரூபாய், 2,000 ரூபாய் என விலை கொடுத்து வாங்கி, பிறகு மின் கட்டணத்தை ஏற்றிவிட்டனர். தேர்தல் நேரத்தில் டோக்கன் உள்ளிட்ட பொருட்களுக்கு அடிமையாகிப் போன தமிழக மக்களுக்கு என்ன சொல்வது. தமிழக மக்களுக்காக பா.ம.க.,பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்காக போராடி வருகிறது. மக்கள் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Maheesh
ஜூலை 17, 2024 14:41

குறிப்பிட்ட சாதியினருக்கான கட்சிதான் பாமக. சாதில்லாத சமுதாயம் உருவாகி வருகிறது, பாமக, திருமா வராமலிருப்பதே சமுதாயத்திற்கு நல்லது.


பாவசாமி
ஜூலை 17, 2024 11:36

வெட்டுன மரங்களுக்கு பரிகாரமா திருப்பி மரம் நடுங்க. நல்லகாலம் பொறக்கலாம்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 16, 2024 21:45

சாதி அடிப்படையில் அரசியல் செய்யும் கட்சிகளுக்கு இனி எதிர்காலம் கிடையாது .......


Matt P
ஜூலை 16, 2024 20:43

தோற்பதற்கு கூட இப்பெல்லாம் இனிப்பு வழங்க ஆரம்பித்து விட்டார்கள் போலிருக்கு. கிட்ட நெருங்கிட்டோம் ..ஒரு இன்ச் தான் தவறி விட்டது என்று.


Matt P
ஜூலை 16, 2024 20:39

சரி .. வந்துட்டு போவுது. உங்க குடும்பத்துக்கு நல்லது தானே. பாத்துட்டயே இருங்க .


aaruthirumalai
ஜூலை 16, 2024 18:26

பாவம் தொண்டர்கள்


Rajah
ஜூலை 16, 2024 18:01

விக்ரமாண்டி தொகுதியில் பாமக, நாம் தமிழர், திமுக கட்சிகள் வேட்ப்பாளர்களாக வன்னியர்களையே நிறுத்தி இருந்தது. வன்னியர்களின் வாக்குகளை குறி வைத்தே வேட்ப்பாளர்கள் நிறுத்தப் பட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. பாமக சாதியக் கட்சி என்று முத்திரை குத்தி விட்டீர்கள். ஆனால் இந்த சமூக நீதி என்று புலம்பும் திமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கூட்டணிக்கு கட்சிகளுக்கு வெட்கமில்லையா சமூக நீதி பற்றி பேசுவதற்கு. துணிவிருந்தால் ஒரு பட்டியல் இனத்தவரை நிறுத்தி இருக்கலாமே. முடியாது ஏனெனில் வெற்றி முக்கியம். ஆகவேதான் இந்த வெட்கம் கெட்டவர்கள் பேசும் சமூகநீதி என்பது ஒரு பம்மாத்து ஏமாற்று வித்தை. நடை முறை சாத்தியமற்றது. மக்களே இனியும் இந்த பொய்யான சமூக நீதி, திராவிடம் பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். இவர்களின் நயவஞ்சகத்திற்கு மின்சார கட்டண உய்ரவ்வு ஒரு நல்ல உதாரணம். இந்த இந்தியா கூட்டணி உங்களைவிட குவாட்டரிலும் பிரியாணி பொட்டலத்திலும் நம்பிக்கை வைத்துள்ளார்கள்


பிரேம்ஜி
ஜூலை 16, 2024 17:55

காசுக்குக்காக கூட்டணி மாறுவது தான் இந்தக் கட்சி நடத்தக் காரணம். அதில் வெற்றிதானே?


Raghavan
ஜூலை 16, 2024 17:16

தீபாவளி சமயத்தில் வாணவேடிக்கை விடும்போது பார்த்தால் ஒளி மயமாக இருக்கும். அதை பார்த்து சந்தோஷப்படவேண்டியது தான்.


பிரேம்ஜி
ஜூலை 16, 2024 17:48

சூப்பர் கமெண்ட்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை