உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி

மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மூன்று சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில், வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள், சுயதொழில் செய்வோர், கல்வி கூடங்களுக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இந்த இலவச ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி, மாவட்டத்தில் 157 பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க பயனாளிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டது. தலா ஒரு ஸ்கூட்டர் ரூ.96 ஆயிரம் ஆகும். இதனையடுத்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தல் முதல் கட்டமாக 14 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய்நாராயணன், திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷிநிகம் ஆகியோர், மாற்றுத்திறனாளிகளிடம் பெட்ரோல் ஸ்கூட்டரை வழங்கினர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்