உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சவுக்கு தோப்பு எரிந்து சேதம்

சவுக்கு தோப்பு எரிந்து சேதம்

மயிலம் : மயிலம் அருகே உள்ள அரியங்குப்பம் கிராமத்தில் சவுக்கு தோப்பு எரிந்து சேதம் அடைந்தது.விழுப்புரத்தை சேர்ந்தவர் ரசாக், 27; இவருக்கு சொந்தமான நிலம் மயிலம் அருகே உள்ள அரியங்குப்பம் கிராமத்தில் உள்ளது. இவர் 15 ஏக்கர் பரப்பளவில் சவுக்கு மரங்களை பயிரிட்டுள்ளார். நேற்று முன்தினம் மயிலம் பகுதியில் பலத்த காற்று வீசியது.இதனால் மின்சார உயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி மின் பொறி ஏற்பட்டு, சவுக்குதோப்பில் விழுந்து தீ பிடித்த எரிந்தது. தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதில் 7 ஏக்கர் அளவிற்கு சவுக்கு தோப்பு எரிந்தது முற்றிலும் சேதமடைந்தது. இது குறித்து ரசாக் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ