உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போதை கணவரால் மனைவி தற்கொலை

போதை கணவரால் மனைவி தற்கொலை

திண்டிவனம்: திண்டிவனம் அருகே கணவர் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால், மனமுடைந்த மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.திண்டிவனம் அடுத்த பாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி அம்மு, 30; இருவரும் காதலித்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தாஷீக், 8; தர்ஷிகா, 6; என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.குடிப்பழக்கம் உள்ள முருகானந்தம் அடிக்கடி குடித்து வந்ததால் கணவன், மனைவிக்குமிடையே தகராறு இருந்து வந்தது.கடந்த 9ம் தேதி மாலை 4:00 மணியளவில் முருகானந்தம் குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால், மனமுடைந்த அம்மு உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அம்மு, நேற்று காலை இறந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை