உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் நகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமிக்கப்படுவாரா?

திண்டிவனம் நகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமிக்கப்படுவாரா?

திண்டிவனத்திற்கு புதிய ஆணையாளர் நியமிக்கப்படாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த தமிழ்ச்செல்வி கடந்த மாதம் 12 ம் தேதி, விருதுநகர் நகராட்சி ஆணையாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதே போல் திருப்பத்துார் நகராட்சியில் பணியாற்றி வந்த சத்தீஷ்குமார், திண்டிவனம் நகராட்சி ஆணையாளராக பணி மாற்றம் செய்யப்பட்டார். இதற்கிடையில் சத்தீஷ்குமார், வாணியாம்பாடி நகராட்சி ஆணையாளராக பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனால் திண்டிவனம் நகராட்சிக்கு புதிய ஆணையாளர் வேறு யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. இதை தொடர்ந்து விழுப்புரம் நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வரும் ரமேஷ், திண்டிவனம் நகராட்சி ஆணையாளராக கூடுதல் பொறுப்பு வகித்து, பணிகளை மேற்கொண்டு வருகிறார். நிரந்தர ஆணையாளர் இல்லாததால் அன்றாட பணிகளை மேற்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. திண்டிவனம் நகராட்சிக்கு நிரந்தரமாக புதிய ஆணையாளரை நியமிப்பதற்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை