| ADDED : ஏப் 09, 2024 11:15 PM
விழுப்புரம் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., பாக்யராஜ், வி.சி., ரவிக்குமார், பா.ம.க., முரளிசங்கர் உட்பட சுயேச்சைகள் என 17 பேர் போட்டியிடுகின்றனர். தற்போதைய நிலவரப்படி கடுமையான முன்முனைப் போட்டி நிலவுகிறது.கடந்த லோக்சபா தேர்தலில் திண்டிவனம் நகராட்சி பகுதியில் மட்டும் வி.சி.,வேட்பாளர் 2,000 ஓட்டுகள் அ.தி.மு.க.,வை விட அதிகம் பெற்றார். இதைக் கருத்தில் கொண்டு, இந்த முறை திண்டிவனம் நகராட்சியில் வி.சி., வேட்பாளரை விட அ.தி.மு.க., குறைந்தது 5,000 ஓட்டுகள் அதிகம் பெறுவதற்குண்டான ஆலோசனை ரகசிய கூட்டமாக திண்டிவனத்தில் ஒரு ஓட்டலில் நடந்தது.'மாஜி' அமைச்சர் சண்முகத்தின் சகோதரர் ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்த அந்த கூட்டத்தில் நகர நிர்வாகிகள் மட்டுமின்றி கட்சி சாராத இளைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், சென்னையில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி அகாடமியில் பணியாற்றும் இளம் பெண் ஒருவர் (பிரபல தேர்தல் ஆலோசகர் டீமில் பணியாற்றிவர்) மூலம், இளைஞர்களிடம் கூடுதல் ஓட்டுகளை எப்படி பெறுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களைக் கொண்டு நகர பகுதியில் கூடுதலாக ஓட்டுகளைப் பெற டெக்னிக்கலான ஆலோசனை கூறி முடுக்கி விடப்பட்டுள்ளனர்.புதிய 'டெக்னிக்' கைகொடுக்குமா என்பது தேர்தல் முடிவிற்கு பிறகு தான் தெரியவரும்.