உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகனம் மோதி தொழிலாளி பலி

வாகனம் மோதி தொழிலாளி பலி

விக்கிரவாண்டி : திண்டிவனம் அடுத்த சித்தணி கிராமத்தை சேர்ந்தவர் குமார், 40 ;கூலித் தொழிலாளி.இவர் கடந்த 8ம் தேதி அன்று தனது மாமியார் வீடான ஆசூரில் உள்ள மனைவி,குழந்தைகளை பார்ப்பதற்காக நடந்து சென்றார். விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகம் அருகே சென்ற போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குமார் மீது மோதியது .இதில் தலையில் பலத்த காயமடைந்த குமார் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர் . அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து மோதிய வாகனம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ