உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு

உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு

விழுப்புரம்: விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கப்பட்டது.விழுப்புரம் அடுத்த தோகைப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டார சுகாதார அலுவலர் ராஜாராம் வரவே ற்றார். ரோட்டரி சங்க தலை வர் துரை ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் வினோத், பொருளாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். டாக்டர் கார்த்திகா விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். நிகழ்வில் கலந்துகொண்ட 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஆலோசனையும், ஊட்டச்சத்து பொருள்களும் வழங்கினர். ரோட்டரி சங்கத்தினர், செவிலியர்கள், பொது மக்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை