உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உலக சுற்றுச்சூழல் தினம் மரக்கன்று நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினம் மரக்கன்று நடும் விழா

விழுப்புரம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வனத்துறை சார்பில், விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் மரக்கன்று நடும் விழா நடந்தது.உலக சுற்றுச்சூழல் தினத்தை யொட்டி, 'நமது நிலம், நமது எதிர்காலம்' என்ற இலக்கை அடையும் வகையில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். இங்கு, 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுதும் நாவல், வேம்பு, நாகலிங்கம், அரசமரம், செண்பக மரம், புண்ணை, அத்திமரம் வகைகள் கொண்ட 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது.'மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதன் மூலம் துாய்மையான காற்று, மழை கோடை காலங்களில் வெப்ப காற்றை தவிர்க்கலாம். ஒவ்வொருவரும் தங்களின் குடியிருப்புகள், பணிபுரியும் இடங்களில் கட்டாயம் ஒரு மரக்கன்றாவது நட்டு பராமரிக்க வேண்டும். எதிர்கால சந்ததிக்கு சுற்றுச்சூழல் வளமிக்க இயற்கையை உருவாக்கி தர மரங்களை நட்டு வளர்த்திடுவோம் என, கலெக்டர் பழனி கூறினார். சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, கலெக்டர் பழனி, பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி, நெகிழிப்பைகளை முற்றிலும் தவிர்த்திட வலியுறுத்தினார். இதில், எஸ்.பி., தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ் ஜெய்நாராயணன், தலைமை வன அலுவலர் பெரியசாமி, மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புருஷோத்தமன், நகராட்சி ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் இளையராஜா, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அலுவலர் பவித்ரா, வனச்சரக அலுவலர் கமலக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை