உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ் கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது

பஸ் கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த மரகதபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஹரிதாஸ் மகன் அஜய், 24; இவர், கடந்த 20ம் தேதி, மரதகபுரம் காலனி அருகே சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது, கல்லெறிந்து கண்ணாடியை உடைத்துள்ளார். இதுகுறித்து பஸ்சின் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் அஜய் மீது வழக்கு பதிந்து, அவரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ