உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

மரக்காணம்: கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார் சாவடியில் வாலிபர் மீது மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார். புதுச்சேரி மாநிலம், வைத்திக்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மனோகர் மகன் மணி,23; பெயிண்டர். இவர் நேற்று கோட்டக்குப்பம் அருகே உள்ள சின்னமுதலியார் சாவடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கு சொந்தமான கடையில் பெயிண்டு அடித்து கொண்டிருந்தார். அப்பொழுது சுவற்றில் அருந்து தொங்கி கொண்டிருந்த மின்சார ஒயரில் மணியின் கை பட்டதால், அவர் மீது மின்சாரம் பாய்ந்து கிழே விழுந்தார். அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்