உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செக்யூரிட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

செக்யூரிட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம், 64; குண்டலப்புலியூர் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு காவலராக இருந்தார்.கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி இரவுப் பணியில் இருந்த அவர், கிடங்கு அருகே வி.சாத்தனுாரை சேர்ந்த சாமிக்கண்ணு, 70, என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, அங்கு போதையில் வந்த அசோகபுரி கிராமத்தைச் சேர்ந்த அருள்மொழி, 29, தகராறு செய்து, தேவசகாயத்தை கட்டையால் தாக்கினார். தடுத்த சாமிக்கண்ணுவையும் தாக்கினார்.படுகாயமடைந்த இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி தேவசகாயம் மரணம் அடைந்தார். சாமிக்கண்ணு கொடுத்த புகாரின்படி, அருள்மொழியை கைது செய்த கெடார் போலீசார், விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட அருள்மொழிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 6,000 ரூபாய் அபராதம் விதித்தார்.இதையடுத்து, கடலுார் மத்திய சிறையில் அருள்மொழி அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ