உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற 10 கடைகளுக்கு சீல்

குட்கா விற்ற 10 கடைகளுக்கு சீல்

விழுப்புரம் : விழுப்புரம் பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைத்தனர்.விழுப்புரம் அருகே கோலியனுார், கண்டமங்கலம், விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர்கள் சுகுந்தன், கொளஞ்சியப்பன் தலைமையில், போலீஸ் பாதுகாப்போடு நேற்று திடீர் சோதனை செய்தனர். 36 கடைகளில் ஆய்வு செய்ததில், 10 கடைகளில் அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இந்த கடைகளில் இருந்து 35 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி