உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை, ரூ. 2 லட்சம் கொள்ளை

விழுப்புரத்தில் வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை, ரூ. 2 லட்சம் கொள்ளை

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் கணபதி நகரை சேர்ந்தவர் மணிகண்டன். திருவண்ணாமலையில் உள்ள சினிமா தியேட்டர் ஊழியர். இவரது மனைவி சாந்தி, 45; நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, தனது மகளோடு வீட்டை பூட்டி கொண்டு, வெளியூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்கு சென்றார்.நேற்று மதியம் 1.00 மணிக்கு சாந்தி வீட்டிற்கு திரும்பிய போது, முன்பக்க கதவின் பூட்டு உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த லாக்கர் உடைத்து, 10 சவரன் தங்க நகை, ரூ. 2 லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்தில் விசாரணை செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்ம நபர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி