மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு 'சீல்'
22-Sep-2024
விழுப்புரம் : குட்கா பதுக்கி விற்ற 11 கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் சீல் வைத்தனர்.திண்டிவனம், மயிலம் பகுதி கடைகளில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகுந்தன் தலைமையிலான அலுவலர்கள் மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 11 கடைகளில் குட்கா பதுக்கி விற்றது தெரியவந்தது.கடை உரிமையாளர்கள் மீது, அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 11 கடைகளையும் பூட்டி சீல் வைத்து, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
22-Sep-2024