உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  12 எஸ்.ஐ.,கள் இடமாற்றம்

 12 எஸ்.ஐ.,கள் இடமாற்றம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 12 சப் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மாவட்ட குற்றப்பிரிவிற்கும், விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விழுப்புரம் தாலுகாவிற்கும், அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் விக்கிரவாண்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல், கெடார் சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் கிளியனுாருக்கும், அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் கெடாருக்கும், கஞ்சனுார் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் பெரியதச்சூருக்கும் என மாவட்டத்தில் 12 சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி., சரவணன் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ