மேலும் செய்திகள்
ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து
19-Dec-2024
மயிலம்: மயிலம் அடுத்த தென்பசியார் கிராமத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் காயமடைந்தனர்.திருப்பத்துாரில் இருந்து வேன் மூலம் ஆன்மிக குழுவினர் மேல்மருவத்துாருக்கு வந்தனர். வேனை திருப்பத்துாரை சேர்ந்த டிரைவர் சவுரிமலை, 45; ஓட்டிவந்தார். மேல்மருவத்துாரில் தரிசனம் முடித்துவிட்டு நேற்று மதியம் 2:10 மணி அளவில் மயிலம் அடுத்த தென்பசியார் கிராமம் அருகே வேனில் வந்து கொண்டிருந்தனர்.வேனுக்கு முன்னால் சென்ற பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். பஸ் மீது வேன் மோதாமல் இருப்பதற்காக வேன் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். இதில் வேன் நிலைதடுமாறி, தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் திருப்பத்தூரை சேர்ந்த கோவிந்தன் மனைவி லட்சுமி, 53;, திருப்பத்துார் அடுத்த கருப்புரை சேர்ந்த விஜயா, 61; பெங்களூரை சேர்ந்த ரகு மனைவி ராதா, 42; இவருடைய மகள் நிவேதா, 20; உட்பட வேனில் பயணம் செய்த 14.பேர் காயமடைந்தனர்.விபத்தில் காயம் அடைந்தவர்களை போலீசார் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
19-Dec-2024