உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அனுமதியின்றி வெடிபொருட்கள் 2 பேர் கைது

அனுமதியின்றி வெடிபொருட்கள் 2 பேர் கைது

விக்கிரவாண்டி: அனுமதியின்றி அதிக வெடி பொருட்களை வாகனங்களில் ஏற்றி சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர் விக்கிரவாண்டி, அடுத்த வீடூர் அணை சாலையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியே வந்த மினிலாரி மற்றும் வேனை சோதனை செய்தனர். அதில், அரசு அனுமதியின்றி அதிக வெடி பொருட்களை ஏற்றிச்சென்றது தெரிந்தது. வெடி பொருட்கள் வழங்கிய சேலம் விளக்காட்டை சேர்ந்த நிறுவன மேலாளர் தேவராஜ்,34: டிரைவர்கள் ஆத்துார், கந்தசாமி புதுாரை சேர்ந்த பிரகாஷ்,21; கோபாலபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன்,37; ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து, டிரைவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் வாகனங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை