உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மீன் மார்க்கெட்டில் திருடிய 2 பேர் கைது

மீன் மார்க்கெட்டில் திருடிய 2 பேர் கைது

விழுப்புரம் : கோட்டக்குப்பம் மீன் மார்க்கெட்டில் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் மீன் மார்க்கெட்டில், இரவு நேரங்களில் தொடர்ந்து, ஐஸ் பெட்டியில் வைக்கும் மீன்கள் திருடு போனது. இது குறித்து, மீன் வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை பார்வையிட்டு, மீன் மார்க்கெட்டில் மீன் திருட்டில் ஈடுபட்ட புதுச்சேரி கவுண்டம்பாளையம் வேலாயுதம் மகன் சக்திவேல், 29; சின்னமுதலியார்சாவடி மல்லப்பன் மகன் மனோகரன், 24; ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து, அவர்களிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ