விழுப்புரம் அருகே விபத்துகள் இரு சம்பவங்களில் 2 பேர் பலி
விழுப்புரம் : விழுப்புரம் அருகே தனித்தனியே நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 பேர் இறந்தனர்.விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, தேவநாதசாமி நகரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி, 63; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை, சாலைஅகரம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே சாலையோரம் நடந்து சென்றார்.அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர், பார்த்தசாரதி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதில் பலத்த காயமடைந்த பார்த்தசாரதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.மற்றொரு விபத்துவிக்கிரவாண்டி தாலுகா, வேலியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் எட்டியான்,65; இவர் நேற்று முன்தினம் மாலை, கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கிச்சென்ற தனியார் பஸ் மோதியதில் பலத்த காயமடைந்த எட்டியான், பரிதாபமாக இறந்தார். இந்த விபத்துகள் குறித்து வளவனுார் போலீசார், தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.