உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லுாரி மாணவியிடம் அத்துமீறல் வாலிபர் உட்பட 2 பேர் கைது

கல்லுாரி மாணவியிடம் அத்துமீறல் வாலிபர் உட்பட 2 பேர் கைது

செஞ்சி: திருமண ஆசை காட்டி கல்லுாரி மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த நேமூரை சேர்ந்தவர் நாகப்பன் மகன் நவீன்குமார்,24; இவர், 17வயது கல்லுாரி மாணவியை காதலித்து வந்தார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியுடன் அத்துமீறலில் ஈடுபட்டார். அதன் பிறகு திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.இதுகுறித்து மாணவி, நவீன்குமார் பெற்றோரிடம் முறையிட்டபோது, அவர்கள் மாணவியை திட்டி தாக்கினர். இதனால், மனமுடைந்த மாணவி சில தினங்களுக்கு முன் பூச்சி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது இளம் பெண் தனது பெற்றோரிடம் நவீன்குமார் தன்னை ஏமாற்றியதை தெரிவித்துள்ளார்.இதையடுத்து நேற்று முன்தினம் மாணவி அளித்த புகாரின்பேரில் நவீன்குமார், அவரது தாய் சாந்தி உள்ளிட்ட 5 பேர் மீது செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து நவீன்குமார் அவரது உறவினர் நடேசன், 42; ஆகியோரை கைது செய்தனர். மற்ற மூவரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை