உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணை திட்டி, தாக்கிய தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

பெண்ணை திட்டி, தாக்கிய தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை

விழுப்புரம்: பெண்ணை ஜாதி பெயரை கூறி திட்டி, தாக்கிய தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அடுத்த வன்னிப்பேர் இருளர் குடியிருப்பை சேர்ந்தவர் ராஜி மனைவி தேவி,44; தனியாக வசித்து வரும், இவரிடம் அதேகிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஞானசேகரன்,50; தவறாக நடக்க முயன்றார். அதனை தேவி கண்டித்தார்.இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு மே 24ம் தேதி தேவி, தனது வீட்டில் உறவினர் ரகுவுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ஞானசேகரன், ரகுவை திட்டி அவரது சைக்கிள் டயரை பஞ்சராக்கினார்.இதனை கண்டித்த தேவியை, ஞானசேகரன் ஜாதி பெயரை கூறி திட்டி தாக்கினார். அதனைத் தொடர்ந்து ஞானசேகரன் மனைவி வளர்மதி,45; மகன் தயாளன்,21; உறவினர் மணிகண்டன்,48 ஆகியோர் தேவியை திட்டி தாக்கினர்.இதுகுறித்து தேவி அளித்த புகாரின் பேரில் ஞாசேகரன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த பிரம்மதேசம் போலீசார், அவர்கள் மீது கொலை முயற்சி, எஸ்.சி., எஸ்.டி., உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் விழுப்புரம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கோதண்டபாணி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, ஞானசேகரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும், மற்ற மூவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை