உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோவிலில் திருட்டு 2 வாலிபர்கள் கைது

கோவிலில் திருட்டு 2 வாலிபர்கள் கைது

திண்டிவனம்: திண்டிவனம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம், ராஜாங்குளம் பகுதியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோவலில், கடந்த 10ம் தேதி இரவு இன்வெர்ட்டர், உண்டியல் பணம் மற்றும் பூஜைக்கான பித்தளை பொருட்கள் திருடு போனது.இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து காண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் பதிவான குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.அதில், அவரப்பாக்கம், பெலாக்குப்பம் ரோட்டைச் சேர்ந்த குமார் மகன் விஜய், 19; சிவக்குமார் மகன் சூர்யா, 24; ஆகிய இருவரும் திருடியது தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்து திருடு போன பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி