| ADDED : ஜன 18, 2024 04:26 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் போலீசாரை பணி செய்யவிடாமல் திட்டி தாக்கிய 3 பேரை கைது செய்துள்ளனர்.விழுப்புரம் கே.கே. ரோடு, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், குணால், விஜய், நரேந்திரன், பௌர்ணமி, நந்தினி, நர்மதா உள்ளிட்ட 7 பேர், நேற்று முன்தினம் இரவு அண்ணாநகர் கன்னியம்மன் கோவில் பகுதியில் நின்றுகொண்டு, செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டு, மதுபோதையில் ரகளை ஈடுபட்டுகொண்டிருந்தனர். இரவு அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த, விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸ் காவலர் கோபாலகிருஷ்ணன், பொது இடத்தில் நின்றுகொண்டு பிரச்னை செய்யக்கூடாது என கூறியுள்ளார். அதற்கு அவர்கள், காவலர் கோபாலகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்து, கத்தி, தடி உள்ளிட்டவற்றால் அவரை திட்டி, தாக்கியுள்ளனர்.இதில் காயமடைந்த கோபாலகிருஷ்ணன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் சரத்குமார் உள்ளிட்ட 7 பேர் மீதும், வழக்கு பதிந்து, அதில் புவுர்ணமி, நர்மதா, நந்தினி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.