உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பஸ்சில் பெண் பயணியிடம் 3 சவரன் நகை திருட்டு

பஸ்சில் பெண் பயணியிடம் 3 சவரன் நகை திருட்டு

விழுப்புரம், : பஸ்சில் சென்ற பெண்ணிடமிருந்து 3 சவரன் தங்க நகையை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மனைவி சித்ரா, 45; இவர், கடந்த 17ம் தேதி, விழுப்புரத்தில் நகைக்கடையில் நகை வாங்கிய பின், திருக்கனுார் வழியாக புதுச்சேரி செல்லும் தனியார் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். வழியில், சித்தலம்பட்டு அருகே வந்தபோது, அவரது கை பையும், அதிலிருந்த 3 சவரன் தங்க செயினும் திருடு போனது தெரியவந்தது.சித்ரா கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை