| ADDED : நவ 16, 2025 03:35 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கெடார் சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் அத்தியூர் திருக்கை பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக யமஹா பைக் ஓட்டி வந்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார், 21; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். விழுப்புரம் விழுப்புரம் நகராட்சி மைதானம் அருகே டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதிவேகமாகவும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் பைக் ஓட்டி வந்த சிவன்படை தெருவை சேர்ந்த விஜயதமிழன், 34; ரோஷனை அருகே சந்தைமேடு பகுதியில் அதிவேகமாக பைக் ஓட்டிய பெலாகுப்பம் ஏழுமலை,45; செஞ்சி அருகே மேல்அத்திபாக்கம் வசந்தகுமார், 22; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.