உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அதிவேகமாக வாகனம் ஓட்டிய 4 பேர் கைது

 அதிவேகமாக வாகனம் ஓட்டிய 4 பேர் கைது

விழுப்புரம்: விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் டவுன் போலீசார், ரயில்வே ஜங்ஷன் மற்றும் கிழக்கு பாண்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பாது, சென்னை மேற்கு சைதாபேட்டையை சேர்ந்த டில்லிபாபு, 37; என்பவர் தனது காரிலும், புதுச்சேரி மாநிலம் திருவண்டார்கோவிலை சேர்ந்த குணா, 24; என்பவர் பைக்கிலும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்றது தெரியவந்தது.விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து டில்லிபாபு, குணா ஆகியோரை கைது செய்தனர். இதேபோன்று, விழுப்புரம் நான்குமுனை சந்தில் பைக்கில் அதிவேகமாக வந்த கண்டம்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ், 24; என்பவரை, மேற்கு போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் அருகில் பைக்கில் வேகமாக வந்த கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த சுகுமாரன், 20; என்பவரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை