உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மோதலில் கூலி தொழிலாளி இறப்பு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

மோதலில் கூலி தொழிலாளி இறப்பு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

விழுப்புரம்: முன்விரோத மோதலில் தொழிலாளி இறந்த வழக்கில், வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ், 45; தொழிலாளி. இவர், கடந்த 11.8.2019ம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மகன் இனியவன், 29; என்பவரின் வீட்டு சந்து வழியாக நடந்து சென்றார்.அப்போது முன்விரோதம் காரணமாக இனியவன், ஜெயப்பிரகாஷை தடுத்து ஏன் எங்கள் வீட்டு வழியாக வருகிறாய் எனக் கேட்டார். அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த இனியவன் இரும்புக்கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த ஜெயப்பிரகாஷ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.புகாரின் பேரில், இனியவனை கைது செய்த, விழுப்புரம் மேற்கு போலீசார், அவர் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட இனியவனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அதையடுத்து இனியல் கடலுார் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை