உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரூ.2,000 வழங்கப்பட்ட 50 சதவீதம் பேருக்கு நிவாரண பொருள்கள் வரவில்லை

ரூ.2,000 வழங்கப்பட்ட 50 சதவீதம் பேருக்கு நிவாரண பொருள்கள் வரவில்லை

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், வெள்ள நிவாரண தொகை வழங்கிய 50 சதவீம் பேருக்கு நிவாரண பொருள்கள் கிடைக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் கனமழை பாதிப்பிற்காக, தமிழக அரசு சார்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2,000 ரூபாய் நிவாரண தொகையும், 5 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ துவரம் பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் மொத்தமுள்ள 6.50 லட்சம் குடும்பத்தினரில், பாதிக்கப்பட்ட 4.25 லட்சம் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையும், நிவாரண பொருள்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்த நிவாரண பணிகள், கடந்த 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. வெள்ளம் பாய்ந்து கடுமையாக பாதிக்கப்பட்ட திருவெண்ணைநல்லுார், விக்கிரவாண்டி, மயிலம், மரக்காணம், விழுப்புரம் தாலுகாக்களில் முதலில் அத்தியாவசிய நிவாரண பொருள்களை வழங்கினர். இதனையடுத்து, பாதிப்பை கணக்கிட்டு, அரசின் நிவாரண தொகையும், நிவாரண பொருள்களையும் வழங்கி வருகின்றனர்.இதில், விழுப்புரம் நகரில் உள்ள 42 வார்டுகளில், 9 வார்டுகளில் மழை பாதிப்பில்லை என வழங்காததால், பொது மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதிகளில் விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளிதனர்.இதே போல், மாவட்டத்தின் பிற இடங்களிலும், விடுபட்டவர்கள் மறியல் செய்வதால், அந்த இடங்களுக்கு முதலில் 2,000 ரூபாய் நிவாரண தொகை மட்டும் வழங்கியுள்ளனர்.இதுவரை 4 லட்சம் பேருக்கு நிவாரண தொகை, பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், 50 சதவீதம் பேருக்கு தான் நிவாரண பொருள்கள் போய் சேர்ந்துள்ளது. தொகை பெற்ற 50 சதவீதம் பேருக்கு அரிசி, சர்க்கரை, பருப்பு போன்ற பொருள்கள் வழங்கவில்லை.ரேஷன் கடைகளில் கேட்டால், பொருள் வரவில்லை என கூறுவதாக, பொது மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை