மேலும் செய்திகள்
7 மாத பெண் குழந்தையின் தாய் துாக்கிட்டு தற்கொலை
27-Dec-2024
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே பொது இடத்தில் குடித்ததை கண்டித்ததால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், மூவரை தேடிவருகின்றனர்.கண்டமங்கலம் அடுத்த ராமரெட்டிக்குளம் விஜய், 23; வெள்ளாழங்குப்பம் பாலாஜி, 28; பாலமுருகன், 21; பவித்ரன், 23; ஆகிய 4 பேரும் ராமரெட்டிக்குளம் சுடுகாட்டில் உள்ள கருமகாரிய கொட்டகையில் அமர்ந்து மது அருந்தினர். அதனை அதேபகுதியை சேர்ந்த ராஜசேகர்,29; கண்டித்தார்.ஆத்திரமடைந்த விஜய் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து ராஜசேகரை தாக்கினர். அதனை அறிந்த ராமரெட்டிக்குளத்தை சேர்ந்த லிங்கேஸ்வரன் 22; அரவிந்த், மணிவேல் 29; சஞ்சய்குமார் 21; ஆகியோர் விஜய் தரப்பினர் தாக்கினர். இருதரப்பு மோதலில் விஜய், ராஜசேகர் காயமடைந்தனர்.இருதரப்பு புகார்களின் பேரில் கண்டமங்கலம் போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து விஜய், பாலமுருகன், பவித்ரன் ஆகியோரையும், மற்றொரு தரப்பில் லிங்கேஸ்வரன், ராஜசேகர், சஞ்சய்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், மூவரை தேடி வருகின்றனர்.
27-Dec-2024