உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் மீது மோதி கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயம்

பைக் மீது மோதி கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் படுகாயம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக் மீது மோதிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்தனர். பண்ருட்டி அடுத்த திருவதிகையைச் சேர்ந்தவர் சேகர் மகன் விமல்ராஜ், 26; இவரது நண்பர் கிருஷ்ணராஜ், 26; இருவரும் பைக்கில் மேல்மலையனுார் சென்று விழுப்புரம் திரும்பினர். பைக்கை விமல்ராஜ் ஓட்டினார். நேற்று காலை 9:30 மணிக்கு விழுப்புரம் விராட்டிக்குப்பம் பைபாஸ் சாலை சந்திப்பில் வந்தபோது, எதிரே வந்த சுமோ கார், பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கார் சாலையோரம் கவிழ்ந்தது. இதிபல், விமல்ராஜ், கிருஷ்ணராஜ், கார் டிரைவர் விழுப்புரம் அடுத்த தளவானுார் ஆனந்தராஜ், 31; மற்றும் அவருடன் வந்த அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜ், 30; ஜோதிலிங்கம், 55; நாகம்மாள், 50; குப்பம்மாள், 45; ஆகிய 6 பேரும் படுகாயமடைந்தனர். உடன், காயமடைந்தவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை