உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / டிரைவருக்கு மிரட்டல் ரவுடி மீது வழக்கு

டிரைவருக்கு மிரட்டல் ரவுடி மீது வழக்கு

விழுப்புரம்: விழுப்புரத்தில் லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர்.விழுப்புரம், சித்தேரிக்கரையைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ஜனார்த்தனன், 34; லாரி டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் பாலாஜி, 27; ரவுடி. இவர் மீது, பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.நேற்று முன்தினம் பாலாஜியும், அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து, சித்தேரிக்கரை ரயில்வே கேட் அருகே நின்றுகொண்டிருந்த, ஜனார்த்தனனிடம் தகராறு செய்து திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.ஜனார்த்தனன் கொடுத்த புகாரின் பேரில், பாலாஜி மீது விழுப்புரம் டவுன் போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை