உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு

வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு

வானுார்: வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனப் பகுதியில் விட்டனர்.வானுார் அடுத்த வி.புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவர் நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, இரவு 11:45 மணிக்கு, வீட்டில் விளக்கை போட்டு பார்த்தபோது, பாம்பு வீட்டிற்குள் புகுந்தது தெரிய வந்தது.அதிர்ச்சியடைந்த அவர், வானுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் முகுந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, வீட்டிற்குள் நுழைந்த 3 அடி நீளமுள்ள நாக பாம்பை மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ