உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அணிவகுப்பில் புகுந்த மாடு

அணிவகுப்பில் புகுந்த மாடு

மரக்காணம் : மரக்காணத்தில் நடந்த கொடி அணிவகுப்பில் மாடு புகுந்ததால் பரபரப்பு நிலவியது.மரக்காணம், கோட்டக்குப்பம் பதற்றமான பகுதி என்பதால், லோக்சபா தேர்தலையொட்டி, நேற்று முன்தினம் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., சுனில் தலைமையில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், மாவட்ட ஆயுதப்படை வீரர்கள் மற்றும் உட்கோட்ட போலீசார் என 165 பேர் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது.மரக்காணத்தில் நடந்த அணிவகுப்பின் முன்னால் போலீசார் பேண்டு இசைத்தபடி சென்றபோது, பழைய பஸ் நிலையம் அருகே திடீரென பசுமாடு புகுந்தது. போலீசார் விரட்டியடித்தும் கொடி அணிவகுப்பில் ஒய்யாரமாக நடந்து சென்றது. சிறிது துாரம் வரை சென்ற மாட்டை ஒருவழியாக சமாளித்து வெளியேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி