| ADDED : ஜன 01, 2024 06:02 AM
விழுப்புரம் : விழுப்புரம் ரோஸ் மலர் டெவலப்மெண்டல் கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டி நிறுவனம் மூலம் 5,372 உறுப்பினர்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக தலைவர் பிரபலா ஜெ ராஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:ரோஸ் மலர் டெவலப் மெண்டல் கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டி நிறுவனத்தின் நோக்கம், உறுப்பினர்களின் பொருளாதார, சமூக நலனை மேம்படுத்துதல், சர்வதேச அளவில் ஏற்கப்பட்ட கூட்டுறவு கொள்கை களை மேம்படுத்துதல், விவசாய தொழிலை மேம் படுத்தி உற்பத்தியை வளர்ச் சியடைய செய்வது ஆகும்.இந்நிறுவனத்தில் தற்போது தமிழகத்தில் 37 ஆயிரத்து 491 உறுப்பினர்களும், புதுச்சேரியில் 3,206, கர்நாடகாவில் 972, கேரளாவில் 1,268, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகளில் 1,421 உட்பட 44 ஆயிரத்து 358 நபர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.மொத்த உறுப்பினர்கள் பங்கு தொகை 1.65 கோடி ரூபாய். சேமிப்பு தொகை 7.96 கோடி ரூபாயில் அவர்களின் தொழில் அபிவிருத்திக்கு திரும்ப பெற்றது 11.78 கோடி ரூபாய் ஆகும். தொடர் வைப்பு நிதி 1.55 கோடி ரூபாய், வைப்பு நிதி 3.18 கோடி ரூபாய் சேர்த்து தற்போது வரை 23.86 கோடி ரூபாய் கடனை 5,372 உறுப்பினர்கள் பெற்று பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.அதிகபட்ச வட்டியாக வைப்பு நிதிக்கு 12.50 சதவீதம், தொடர் வைப்பு நிதிக்கு 11 சதவீதம், சேமிப்புக்கு 7.50 சதவீதம் மற்றும் சிறப்பு சேமிப்பிற்கு 8.50 சதவீதம் வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.தற்போது உறுப்பினர்கள் குழந்தைகளின் வருங்கால கல்வி, வேலை, தொழில், திருமண தேவைக்காக ஒரு சிறப்பு வைப்பு நிதி திட்ட மாக 'செல்ல குழந்தைகள் நிரந்தர வைப்பு நிதி திட்டம்' செயல்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் 5,000 ரூபாய் மூலம் 10 லட்சம் ரூபாய் வரை கட்ட வசதி யுள்ளது. இதில், சேர்வோ ருக்கு 6 ஆண்டுகளில் தொகை இரட்டிப்பாகும். இத்திட்டத்தில் பயன்பெற ரோஸ் மலரால் அங்கீகரிக்கப்பட்ட பவ்டா கிளைகளை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.