உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்த கூட்டம்

இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது குறித்த கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொது மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், கலெக்டர் பழனி தலைமையில் நடந்தது. அப்போது, அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள், மக்களுடன் முதல்வர் முகாம், விவசாய குறைதீர்க்கும் நாள் மற்றும் பல்வேறு அலுவலகங்களில் இருந்து வரும், வீட்டு மனைப்பட்டா வழங்க கோரிய பொது மக்களின் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.ஏற்கனவே வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு, கிராம கணக்குகளில் திருத்தம் செய்யாமல் உள்ளவர்களுக்கும், கணக்கு திருத்தம் செய்து வழங்கிடவும், மேலும், ஆதி திராவிடர் நலம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்புகளுக்கு வழங்கப்பட்ட பட்டாகளுக்கும் இ-பட்டா வழங்கிடவும், அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று, கலெக்டர் கூறினார். இக்கூட்டத்தில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், கலெக் டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவக்கொழுந்து மற்றும் முக்கிய துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை