உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஆத்திக்குப்பம் - வண்டிப்பாளையம் தரைப்பாலம் கந்தல்: போக்குவரத்து கட்

 ஆத்திக்குப்பம் - வண்டிப்பாளையம் தரைப்பாலம் கந்தல்: போக்குவரத்து கட்

மரக்காணம்: ஆத்திக்குப்பம் - வண்டிப்பாளையம் இடையே உள்ள கழுவெளியில் தரைப்பாலம் சாலை மழையால் சேதமடைந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மரக்காணம் பக்கிங்காம் கால்வாய் மற்றும் கழுவெளி ஏரி இணையும் பகுதியில் கழுவெளி ஏரியில் குறுக்கே 200 மீட்டர் நீளத்தில் தரைப்பாலம் மற்றும் இரண்டு கி.மீ., துாரத்திற்கு தார்சாலை கடந்த ஐந்தாண்டிற்கு முன் போடப்பட்டது. அப்பகுதி மக்கள் தரைப்பாலத்திற்கு பதிலாக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் தரைபாலமும், தார்சாலையையும் அமைத்தனர். இந்நிலையில் கடந்தாண்டு பெய்த கனமழையில் தரைப்பாலத்தில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டது. தற்போது பெய்த கனமழையால் தரைப்பாலத்தின் நடுவில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உடைந்தது. மேலும் தார்சாலையும் முற்றிலும் சேதமடைந்து. இதனால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் அரசு பஸ்சும் நிறுத்தப்பட்டது. இதனால் வண்டிப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமமக்கள் மரக்காணம் வழியாக 15 கி.மீ., துாரம் சுற்றி புதுச்சேரி செல்கின்றனர். அதே போல் அனுமந்தை, ஆத்திகுப்பத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் திண்டிவனம் செல்ல 15 கி.மீ.,துாரம் சுற்றிச் செல்கின்றனர். மேலும் தேர்தல் நேரத்தில் எம்.பி., - எம்.எல்.ஏ., விற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் ஆத்திக்குப்பம் வண்டிப்பாளையத்தை இணைக்கும் கழுவெளியில் உயர் மட்டபாலம் கட்டிதருவதாக வாக்குறுதி கொடுக்கின்றனர். வெற்றி பெற்றதும் இந்த பக்கம் வருவதில்லை. இது குறித்து எம்.பி., - எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் கேட்டாலும் எந்த பதிலும் சொல்வது இல்லை என அப்பகுதி மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை