உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியேற்பு

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் பழனி தலைமையில், கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழியினை, அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.தமிழகத்தில் பிப்ரவரி 9ம் தேதி, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அரசமைப்புச் சட்டத்தின்படி, மனிதனை வணிகப் பொருளாக்குதல், வலுக்கட்டாயமாக வேலை சுமத்தும் வழக்கங்களும், கடன் பிணையத்தொகை வழங்கி கட்டாயப் பணிக்கு வற்புறுத்துவதும், தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளது.இதனால், கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்தில் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். கொத்தடிமை தொழிலா ளர்முறை எந்த தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு, ஒழிக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் உறுதிமொழியேற்றனர்.நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், சுகாதாரத்துறை இணை இயக்குனர் லட்சுமணன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஆனந்தன் உட்பட துறை சார்ந்த முக்கிய அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை